ராங்கி ; விமர்சனம்

‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தின் இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ராங்கி. இப்படத்திற்கு ஏ.ஆர் முருகதாஸ் கதை எழுதியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு சத்யா இசை அமைத்துள்ளார்.

கிசுகிசு எல்லாம் எழுத மாட்டேன், ஸ்ட்ராங்கான விஷயங்களை மட்டுமே ஹேண்டில் செய்யும் போல்டான ஊடகவியலாளர் தையல் நாயகியாக நடிகை த்ரிஷா இந்த ராங்கி படத்தில் நடித்துள்ளார். தனது அண்ணன் மகளின் போட்டோவை பயன்படுத்தி ஒரு பெண் சாட் செய்வதை தெரிந்து கொள்ளும் த்ரிஷா அந்த 17 வயது பையன் யார் என்பதை கண்டு பிடிக்க அவனுடன் சாட் செய்கிறார். பின்னர் அவன் வார்த்தைகளால் ஈர்க்கப்படும் த்ரிஷாவுக்கு ஏற்படும் தீவிரவாத சிக்கல் தான் ராங்கி படத்தின் கதை.

இதுவரை சோலோ ஹீரோயினாக த்ரிஷா நடித்த படங்கள் எதுவும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை, ஆனால் ராங்கி த்ரிஷாவுக்கு சரியான ஒரு படமாக அமைந்திருக்கிறது. பொன்னியின் செல்வனில் குந்தவையாக நம்மை ஈர்த்த த்ரிஷா, ரான்கியில் தையல் நாயகியாக நம்மை மிரட்டுகிறார்.

தொழில்நுட்பம், அரசியல், காதல் என பல விதமான கருத்துக்கள் வந்தாலும் அதனை சரியாக பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் இணயத்தளத்தின் மூலம் செய்யும் குற்றங்களினால் மற்றவர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்தும், பத்திரிக்கை துறையை பற்றி கேள்வி எழுப்பிவதும், அரசியலை கடுமையாக விமர்சிப்பதுவுமாக இருக்கிறது.

இரண்டாம் பாதியில் தற்போது அரசியல் உள்ள நிலை, காதல், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு சாதாரண மனிதன் எப்படி தீவிரவாதியாக மாற்றப்படுகிறான் என்பதை மிகவும் நுட்பக்காக காட்சிப்படுத்தி படத்தை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறார் இயக்குனர். இப்படத்தில் பேசப்பட்ட வசனங்கள் திரைக்கதைக்கு மேலும் வலு சேர்த்து. அதில் “தீவிரமாக அரசியல் செய்பவன் அரசியல்வாதி”, “தீவிரமாக போராடுபவன் தீவிரவாதி.” வென்றால் போராளிகள் தோற்றால் தீவிரவாதிகள் போன்ற வசனங்கள் மிரள வைக்கின்றன.

இசையமைப்பாளர் சத்யாவின் பின்னணி இசை, ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள சக்திவேலின் உழைப்பு படத்திற்கு பெரும் பலத்தை கொடுத்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸின் கதை மற்றும் சரவணனின் இசை படத்திற்கு பிளஸ்.

நடிகை த்ரிஷா மற்றும் ஆலிம் படத்தை சரியான இடத்தில் பலமாக தாங்குகின்றனர்.
மொத்தத்தில் இந்த ராங்கியை நிச்சயம் ஒரு முறை காப்பாத்தலாம்.