நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் படம் ‘கப்ஜா’. கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஆர்.சந்துரு இயக்கியுள்ளார். இதில் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் ஆர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் ‘கப்ஜா’ திரைப்படத்தின் டீசரை நடிகர் உபேந்திராவின் பிறந்தநாளையொட்டி நடிகர் ராணா டகுபதி இணையத்தில் வெளியிட்டுள்ளார். பிரம்மாண்டமாஅ உருவாகியுள்ள ‘கப்ஜா’ படத்தின் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்’ என படக்குழு தெரிவித்துள்ளது. தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் இப்படம் குறித்து இயக்குனர் ஆர்.சந்துரு பேசியதாவது, “1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் ‘கப்ஜா’. இந்த படத்திற்கு ‘தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா’ எனும் டேக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *