பேட்டரி ; திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் த்ரில்லர் சீசன் தொடங்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு அதிகப்படியான த்ரில்லர் படங்கள் வந்து கொண்டிருகின்றன. அந்த வரிசையில் வெளியாகியுள்ள படம் பேட்டரி.

சென்னையில் அடுத்தடுத்து ஒரே மாதிரியான சில கொலைகள் நடக்கின்றன. அதைப்பற்றி விசாரிக்க புதிதாக வரும் சப் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் களமிறங்குகிறார். ஒரு கட்டத்தில் அசிஸ்டெண்ட் கமிஷ்னரும் அந்த விசாரணையில் இறங்குகிறார். எதற்காக இந்த கொலைகள் செய்யப்படுகிறது, குற்றவாளியை கண்டுபிடித்தார்களா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

மருத்துவ துறையில் நடக்கும் குற்றத்தை த்ரில்லர் படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் மணி பாரதி.

அறிமுக நாயகன் செங்குட்டுவன் முதல் படத்திலேயே போலீஸ் அதிகாரியாக அசத்தியிருக்கிறார். அவரது கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக அம்மு அபிராமி சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இவர்களுடன் வில்லன்களாக நடித்துள்ள நாகேந்திர பிரசாத், அபிஷேக். அசிஸ்டெண்ட் கமிஷனராக வரும் தீபக் அனைவரும் அவரவர் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

மருத்துவ துறையில் நடக்கும் மக்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்ல முயன்றிருக்கிறது பேட்டரி.