காரி ; விமர்சனம்

இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காரி. இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் நரேன், பார்வதி அருண், இந்த அபிராமி, சம்யுக்தா, பிரேம்குமார், ரெடின் கிங்ஸ்லே, பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

சென்னையில் குதிரை ஜாக்கியாக வேலை செய்யும் நாயகன் ,ஒரு சில காரணங்களால் தன் கிராமத்திற்கு செல்கிறார்,அங்கு யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளையை அடக்குவதற்காக சபதம் எடுக்கிறார் பின் அதை சுற்றி நடக்கும் கதைக்களம் இறுதியில் அந்த சபதத்தை வெற்றிகரமாக முடித்தாரா இல்லையா? என்பதை ஜனரஞ்சகமாக சொல்லியிருக்கும் படமே சசிகுமாரின் “காரி”.
வழக்கம்போல் இல்லாமல் தன்னுடைய நடிப்பு ஆற்றலை சசிகுமார் திறமையாக இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது சசிகுமாருக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று சொல்லலாம். அவருக்காக எழுதப்பட்ட கதை ஆகவே இந்த படம் இருக்கிறது. படம் முழுக்க நகைச்சுவை இல்லை என்றாலும் படம் காட்சிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார் சசிகுமார். குறிப்பாக, காளை மாட்டை வைத்து வரும் காட்சிகள் எல்லாம் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது.

கிளைமாக்ஸில் வரும் ஜல்லிக்கட்டு காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.

கதாநாயகியாக வரும் பார்வதி அருண் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆடுகளம் நரேனுக்கு மற்றுமொரு நல்ல கதாபாத்திரம், வழக்கம்போல கலக்கியிருக்கிறார்.
குணச்சித்திர வேடங்களில் வரும் அம்மு அபிராமி, பாலாஜி மோகன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் நடிப்பு அருமை.

இயக்குனர் மண்வாசம் மாறாமல், கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தையும், மக்களின் நிலைமையும் அழகாக சொல்லி இருக்கிறார். இதற்கு பக்கபலமாக இமானின் பின்னணி இசை இருந்திருக்கிறது.

கணேஷ் சந்த்ராவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக கடைசி 20 நிமிடங்கள் வரும் ஜல்லிக்கட்டு காட்சிகள் மெய்சிலிப்பை ஏற்படுத்துகின்றன, வாடிவாசலுக்கு சென்று திரும்பிய ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும் காட்சிகளை சிறப்பாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவிற்கு சல்யூட்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சசிகுமாரின் காரி படம் நன்றாக இருக்கிறது.