காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் ; விமர்சனம்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, ஆடுகளம் நரேன், மதுசூதன ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்.

உறவுக்காரர்களுடன் திருமணம் முடிக்கப்பட்ட தன்னுடைய அண்ணன், அக்கா இருவரும் வெவ்வேறு சூழலில் குடும்பத்தினரின் கொடுமையால் இறந்துபோக, அண்ணனின் குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார் சித்தி இத்னானி. ஆனால், அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு சித்தி இத்னானியையும் மணமுடித்து தங்கள் வீட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்கின்றனர். இதற்கு சம்மதிக்காத அவர், மதுரை சிறையிலிருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்பவரை சந்திக்கச் செல்கிறார். யார் இந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்? அவர் ஜெயிலுக்கு செல்ல என்ன காரணம்? சித்தி இத்னானி ஏன் அவரை சந்திக்க செல்கிறார் என்ற கேள்விகளுக்கு பதில்தான் படத்தின் மீதி கதை.

இந்து முஸ்லீம் ஒற்றுமையை மையமாக வைத்து சமகால அரசியலை பேசியுள்ளார் இயக்குனர் முத்தையா. வழக்கமான முத்தையா ஹீரோக்கள் எப்படி இருப்பார்களோ அப்படி இருக்கிறார் ஆர்யா, இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம். சித்தி இத்னானி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜமாத் தலைவராக வரும் பிரபுவின் நடிப்பு அற்புதம். படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதன ராவ் என ஏகப்பட்ட வில்லன்கள் இருந்தாலும், டாணாக்காரன் பட இயக்குனர் தனி கவனம் பெறுகிறார்.

சண்டைக் காட்சிக்கான வேகத்தை தன் பின்னணி இசை மூலம் கூட்டியிருக்கும் விதத்தில் கவனிக்க வைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். ஆக்சன் காட்ச்சிகளை அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார் வேல்ராஜ்.

முதல் பாதி சற்று சோதனையாக இருந்தாலும், இரண்டாம் பாதி அதை சரி செய்து விட்டது, முத்தையா தான் சொல்ல வந்த கருத்தை அழகாக சொல்லி இருக்கிறார்.

மொத்தத்தில் இது முத்தையாவின் யூனிவர்ஸ்.