கொடை ; விமர்சனம்

இயக்குனர் ராஜசெல்வம் இயக்கத்தில் கார்த்திக் சிங்கா, அனாயா, ரோபோ சங்கர், அஜய் ரத்னம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கொடை.

கொடைக்கானலில் ஒரு தாங்கும் விடுதியில் வேலை பார்க்கிறார் கதாநாயகன். அடிக்கடி தான் தங்கி வளர்ந்த ஆசிரமத்திற்கு உதவி செய்வார், அப்போது ஆசிரமத்திற்கு பண தேவை என்பதால் கதநாயகியின் அப்பா நாயகனிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கொடைக்கானலில் இருக்கும் பைனான்ஸியரிடம் இந்த பணத்தை கொடுத்து 25 லட்சம் ரூபாய் வாங்கி வர சொல்கிறார்.

கதாநாயகனும் கொடைக்கானலில் இருக்கும் பெரிய பைனான்ஸியரிடம் பணத்தை கொடுக்கிறார், ஆனால் அந்த பைனான்ஸியர் கதாநாயகனை ஏமாற்றி விடுகிறார், ஏமாந்த அந்த பணத்தை ஹீரோ எப்பட கைப்பற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை. இதற்குள் காதல், நகைச்சுவை உள்ளிட்ட பல அம்சங்களையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.

கதாநாயகன் கார்த்திக் சிங்கா காதல், ஆக்சன் என அனைத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக வரும் அனாயா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரோபோ சங்கர், மாரிமுத்து, எம்.எஸ்.பாஸ்கர், அஜய் ரத்னம் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தனர்.

சிபாஷ்கவியின் இசையும் அர்ஜுனன் கார்த்திக்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.

ராஜசெல்வம் தெளிவான நேர்க்கோட்டில் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.