Reviews

பரமசிவன் பாத்திமா ; விமர்சனம்


மலை கிராமம் ஒன்றில் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் மோதல் ஏற்படுவதால் இரண்டு பகுதியினரும் ஒருவர் பகுதிக்குள் இன்னொருவர் நுழையக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கே அடுத்தடுத்து இருவர் கொல்லப்பட அதைத் துப்பறிய போலீஸ் உள்ளே வருகிறது.

இந்த கொலையில் யார் யார் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் . இதில் அதிர்ச்சியான பல சம்பவங்கள் நடக்கின்றன. கொலைகளைச் செய்வது ஆவிகள் என்பதால், கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது காவல்துறை.

நாயகன் பரமசிவனும், நாயகி பாத்திமாவும் எப்படி இறந்து ஆவியானார்கள்? அவர்களுக்கும் அவர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் இடையில் என்ன விரோதம்? அவர்கள் கொல்ல நினைத்திருந்த ஏனையோரையும் கொன்று முடித்தார்களா என்பது மீதிக்கதை..

விமல் கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக நல்ல சினிமாவை நல்லதொரு கதையை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விமல் எதற்காக இப்படியொரு கதையில் நடித்தார் என்று தெரியவில்லை. அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாயாதேவியும் கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்.

பாதரியராக எம்.எஸ்.பாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டராக இசக்கி கார்வண்ணன், அண்ணனாக வில்லனாக களமிறங்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.சுகமார், துபாய் மாப்பிள்ளையாக கூல்சுரேஷ், சாமியாராக அருள்தாஸ்,அம்மாவாக ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா,விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை ஆகியோர் படத்தில் முக்கிய பங்களித்து காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்.

இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு உள்ளது. எம்.சுகுமார் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் சுகுமார் பணிகள் கவனிக்க வைக்கிறது. அதோடு அவரது வில்லத்தன கேரக்டர் நன்றாக வந்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன் இந்து மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களை விமர்சிக்கும் வகையிலும், மற்ற மதங்களை குறை சொல்லும் விதமாகவும் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். எந்த மதமாக இருந்தாலும், அனைவரும் ஒன்று என்ற சிந்தனையோடு மனிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவர்களிடம் மத மோதல்களை உருவாக்க முயற்சித்திருக்கிறார்.

.

.