பராரி – விமர்சனம்


ராஜூமுருகனின் உதவி இயக்குனர் எழில் பெரியவேடி இயக்கி இருக்கும் படம் பராரி. மக்களிடையே இருக்கும் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கான அரசியல் பின்னணியை தைரியமாக சொல்லியிருப்பதோடு, அதனால் ஆதாயம் தேடுபவர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் சிறிய கிராமத்தில் பட்டியல் இனத்தில் கூர்ம அவதாரத்தை சாப்பிடும் இனத்தவருக்கும் அதை வெறுக்கும் மற்றொரு இனத்திற்கும் எப்போதுமே ஊர் பகை உண்டு. ஒரு மலைக்குன்று அந்த இரு கிராமத்திற்கும் பொதுவானது. அந்த பொதுவான மலைக்குன்றின் மேல் மாட்டுக் கறியை அறுக்கும் இனத்தைச் சேர்ந்தவர்களை பழிவாங்க அவர்கள் கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாயை பூட்டு போட்டு விட அதனால் பிரச்சனை ஏற்படுகிறது.

இது ஒரு புறம் கர்நாடக மாநிலத்தில் ஒரு அரசியல் அமைப்பை சேர்ந்த கட்சித் தலைவர் தன் இனம் தன் மக்கள் என காவிரி மூலமாக பிரிவினை ஏற்படுத்தும் விதமாக தன் தொண்டர்களை தயார் படுத்தி வைக்க அதே கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய ஜூஸ் பேக்டரிக்கு குத்தகை முறையில் வேலை செய்ய திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பட்டியலில் இனத்தை சேர்ந்த இரு சாராரும் கூலி வேலைக்கு வருகிறார்கள்.

அங்கு நாயகன் எதிர் நாயகன் நாயகி என அனைத்து கதாபாத்திரங்களும் ஒன்று சேர அந்த இடத்தில் அந்த மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கதாநாயகியை அவமானப்படுத்த அதை எதிர்த்து கதாநாயகன் சண்டையிட பிரச்சனையை ஆறப்போட்டு காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக வர அதை எதிர்த்து கர்நாடகா அரசியல் கட்சித் தலைவரும் அவர் தொண்டர்களும் கலவரத்தை தூண்ட அந்தக் கலவரத்தை பயன்படுத்தி கதாநாயகன் கதாநாயகி எதிர் நாயகன் என அனைவரும் பழிவாங்கப்படுகின்றனர். இதுதான் பாராரியின் கதை.

நாயகனும் தயாரிப்பாளரும் ஒருவரே தயாரிப்பது என்பதால் நாயகன் தமிழக திரை நாயகனுக்கு உரிய எந்த ஒரு முன்னெடுப்பு இல்லாமல் எதார்த்த நாயகனாக பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவராக தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். கதாநாயகனுக்கு நான் சளைலைத்தவள் இல்லை என்பது போல் நாயகி போட்டி போட்டுக் கொண்டு தன் பங்களிப்பை பரபரப்பாக செய்து இருக்கிறார்.

இறுதிக்காட்சியில் நாயகனையும் நாயகியையும் உடைகளை அவிழ்த்து மானபங்கப்படுத்தும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அரசியல் கலவரம் ஏற்கனவே காவிரி பிரச்சனையில் நம் மக்கள் அனுபவித்தது தான். எதிர் நாயகனும் மற்ற நாயகனின் நண்பர்களும் அவரவர் பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.

சொந்த ஊரில் தண்ணீர் தர மாட்டேன் என்று கூறும் மக்களையும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று கூறும் கர்நாடக அரசியலையும் ஒன்றாக இணைத்து நாம் இங்க அடித்துக் கொண்டிருக்கிறோம் நம்மை அடிக்க பக்கத்து மாநிலத்தை சேர்ந்தவன் முயற்சி செய்துகொண்டிருக்கிறான் அவனை என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி குறியுடன் படம் முடிந்தாலும் காவிரி நீர் பங்கிட்டு முறையில் நடக்கும் அரசியல் லாபத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

முதல் படத்திலேயே உள்ளூரில் சாதியை வைத்து பாகுபாடு, மாநிலத்தில் இனத்தை வைத்து பாகுபாடு, என்று இந்தியா முழுவதும் சாதி, மதம், மொழி ஆகியவற்றின் பேரில் நடக்கும் வன்கொடுமைகளை சமூக சிந்தனையோடுமிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் எழில் பெரியவேடி