கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பார்வை வெளியீடு!

ஈக்ல்’ஸ் ஐ புரொடக்‌ஷன் (Eagle’s Eye Production) தயாரிப்பில், ‘ஜீரோ’ படப்புகழ் இயக்குநர் ஷிவ் மோஹா இயக்கத்தில் கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் ரமேஷ் பிள்ளை, சுதன் சுந்தரம் & ஜி. ஜெயராம் படம் குறித்து பேசுகையில், “இது போன்ற இளமை ததும்பும் அணியுடன் வேலை பார்ப்பது என்பது எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அதுதான் இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை சீக்கிரம் முடிக்க உதவியது. இந்தப் படத்தில் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றிய பெரும்பாலானோர் என்னுடைய கல்லூரி கால நண்பர்கள் மற்றும் ‘ஜீரோ’ படத்தில் பணியாற்றியவர்கள் என்பதால் எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருந்தது.

டெட்லைனுக்குள் வேலை சரியாக முடிக்க வேண்டும் என்று அனைவரும் போட்டி போட்டு கொண்டு வேலை பார்த்துள்ளோம். ‘சுழல்’ படத்தின் மூலம் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கதிர் கொண்டுள்ளார். இந்தப் படத்திலும் பாராட்டுதலுக்குரிய சிறப்பானதொரு நடிப்பை கொடுத்துள்ளார். திவ்யபாரதியும் குறைந்த காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். படத்தில் அவரது நடிப்பும் முக்கியமான ஒரு அங்கம்.

இயக்குநர் ஷிவ் மோஹா தன்னுடைய திரைக்கதையை படமாக்குவதில் திறமையான ஒருவர். தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் தியேட்டரில் படம் வெளியாக இருக்கும் தேதி ஆகியவை பற்றி அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.

மலையாளத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ படத்தின் தழுவல் தான் ‘ஆசை’ திரைப்படம் ஆகும்.

கலை: S. ராஜா மோகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *