நான் கடவுள் இல்லை ; விமர்சனம்

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, இனியா, சரவணன், சாக்சி அகர்வால், ரோகினி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் நான் கடவுள் இல்லை.

சி.ஐ.டி. அதிகாரியாக இருக்கும் நாயகன் சமுத்திரகனி, மனைவி இனியா, மகள், தாயுடன் வாழ்ந்து வருகிறார். இவர் போலீசாக இருக்கும் போது பல கொலை செய்துவந்த சரவணனை பிடித்து ஜெயிலில் அடைக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சரவணன், தன்னை கைது செய்த சமுத்திரகனியையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்.

இதனால் அடுத்து நடந்தது என்ன? சமுத்திரகனிக்கும் சரவணனுக்கும் இடையேயான யுத்தத்தில் வென்றது யார்? இந்த பிரச்சனையை எஸ்.ஏ சந்திரசேகர் தீர்த்தாரா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தில் சி.ஐ.டி அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சமுத்திரகனி. மனைவி, மகளை காப்பாற்ற முயற்சிப்பது, சரவணனை பிடிக்க ஆர்வம் காட்டுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகியாக வரும் இனியா, சாக்சி அகர்வால், சரவணன் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

உதவி தேவைப்படும் போது உதவுபவர்களே உண்மையான கடவுள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சித்தார்த் விபினின் இசையும், மகேஷ் கே.தேவின் ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

விறுவிறுப்பாக செல்லும் நான் கடவுள் இல்லை படத்தை தாராளமாக பார்க்கலாம்.