அம்முச்சி சீசன் 2 – திரை விமர்சனம்


ஏற்கனவே வெளியாகி இருந்த அம்முச்சி 1-ன் அடுத்த சீசன் தான் இந்த அம்முச்சி 2.

கதாநாயகன் தன் பாட்டி ஊருக்கு செல்கிறான், அங்கு ஒரு பெண்ணை பார்த்து காதலில் விழுகிறான். சில நாளில் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பிக்கிறனர். கதானாயகிக்கு இந்த கிராமத்தை விட்டு சென்று நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை.

ஆனால் அதில் அவளுக்கு ஒரு சிக்கல். குடிகார தந்தைக்கு அவர் சொல்லும் நபரை தான் கதாநாயகி திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம். இறுதியில் கதாநாயகன், அந்த குடிகார தந்தையை சமாளித்தாரா? கதாநாயகியின் ஆசை நிறைவேறுகிறதா என்பதே கதை.

ஒரு பெண்ணுக்கு படிப்பு எவ்ளோ முக்கியம் என்பதை நகைச்சுவை கலந்த திரைக்கதையுடன் அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். இதற்கு பிரசன்னா பாலசந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

நக்கலைட்ஸ் நடிகர்கள் பற்றி சொல்லவா வேண்டும், வழக்கம்போல் அசத்தியிருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காமெடி தான், நம்மை மறந்து சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் அம்முச்சி 2 எல்லாரும் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *