டைரி ; விமர்சனம்

16 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் ஒரு வழக்கை கையில் எடுக்கும் பயிற்சி உதவி காவல் ஆய்வாளரின் பயணமே டைரி.

அருள்நிதி, பவித்ரா, மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் புதுமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் கதிரேசன் தாயாரித்திருக்கும் படம் டைரி.

ஊட்டியில் இருந்து கோயமுத்தூர் செல்லும் வழியில் 13-வது கொண்டை ஊசி வளைவில் விபத்துகள் நடைபெறுகிறது. அதேபோல் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனால் அதை யார் செய்தது என்பதை 16 ஆண்டுகளாக காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கை பயிற்சி உதவி ஆய்வாளர் அருள்நிதி கையில் எடுக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது? 13-வது கொண்டை ஊசி வளைவுக்கும் கொலைக்கும் சம்மந்தம் உள்ளதா? என்பதை திரில்லர் படமாக எடுத்துள்ளனர்.

படத்தில் அருல்நிதியின் விசாரணை ஆரம்பமான பிறகு படம் வேகம் எடுக்கிறது. இதற்கிடையில் வரும் இடைவேளை மற்றும் க்ளைமேக்ஸ் டிவிஸ்ட் சுவாராஸ்யப்படுத்துகிறது.

அருள்நிதியின் வழக்கம்போல் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் சமீபகால படங்களை பார்க்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறது.

டைரி படத்தின் பெரும்பாலான காட்சிகள் பேருந்து பயணத்திலேயே படமாக்கப்பட்டுள்ளன. அதிலும் அதற்குள் உருவாகும் நட்பு, திருமணம், பாடல் ஆகியவையும் இடம் பிடித்துள்ளன.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும், ரோன் எதனின் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.

இரண்டாம் பாதியில் படம் முடிந்த பின் மீண்டும் காட்சிகள் நகர்கின்றன. ஆனால் அதற்கு ஒரு கதையை கூறி டைரி இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்துள்ளார் இயக்குனர் இன்னாசி பாண்டியன்.

மொத்தத்தில் ஒரு நல்ல த்ரில்லர் படத்தை பார்த்த திருப்தியை இந்த படம் நமக்கு கொடுக்கும்.