ஜாலியோ ஜிம்கானா ; விமர்சனம்


இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்ப்பில் வெளியாகியுள்ள படம் தான் ஜாலியோ ஜிம்கானா.

மூன்று இளம் பெண்களின் அம்மாவான அபிராமியின் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ மதுசூதனன் மூலம் ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பொதுநல வழக்கறிஞர் பிரபு தேவாவை சந்திக்க தனது மூன்று பெண்களுடன் அபிராமி செல்கிறார். பிரபு தேவா தங்கியிருக்கும் ஓட்டல் அறையின் கதவு திறந்திருக்க, அபிராமி மற்றும் அவர்களது பெண்கள் உள்ளே சென்று பார்க்கும் போது பிரபு தேவா பிணமாக இருக்கிறார்.

இதனால் என்ன செய்வதென்று திகைத்து நிற்கின்றனர். இந்நிலையில், மதுசூதனன் டீம் பிரபுதேவாவை கொல்வதற்காக துரத்துகிறது, அவர் இறந்துவிட்டார் என்று தெரியாமல் அவர் பிணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல், எடுத்துக் கொண்டு சுற்றுகின்றனர் அபிராமி டீம்.

பிரபுதேவாவின் பிணத்தை வைத்து மிகப்பெரும் திட்டம் தீட்டுகிறார் மடோனா.. பிரபுதேவாவை கொன்றால் மட்டுமே தனக்கு மினிஸ்டர் பதவி கிடைக்கும் என்பதால் பிரபுதேவாவை தேடி அலைகிறார் மதுசூதனன். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாகயன் பெரும்பாலும் பிணமாகவே வருவது இந்தப் படத்திலாகத்தான் இருக்கும். ஒரு நீதிமன்றக் காட்சிக்கும், இரண்டு பாட்டுக்கும் மட்டுமே உயிரோடு இருக்கிறார் நாயகன் பிரபு தேவா. ஆனால் மற்ற காட்சிகளிலும் நடன அசைவு போலவே கைகால்களை ஆட்டி சிரிக்க வைக்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் உயிரற்ற நிலையில் அவர் போடும் பொம்மலாட்ட சண்டைக்காட்சி அசத்தல்.

மடோனா செபாஸ்டியன், அபிராமி ஆகியோருடன் மேலும் மூன்று பெண்கள் படம் முழுவதும் பயணித்தாலும், பெரிய முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறார்கள். மடோனா செபாஸ்டியன் முதல் முறையாக காமெடி செய்ய முயற்சித்திருப்பது வரவேற்கத்தக்கது. அபிராமியும் அவருடன் இணைந்து நம்மை சிரிக்க வைக்க படாதபாடு படுகிறார்

அஸ்வின் விநாயகமூர்த்தியின் உடைய இசை நன்றாக இருக்கிறது. குறிப்பாக, போலீஸ்காரனா கட்டிக்கிட்டா பாடல் இருக்கிறது. ஆட்டம் போட வைத்திருக்கிறது

எந்த இடத்திலும் லாஜிக் பார்க்காமல் சிரிப்பதற்கென்று திரையரங்கிற்குள் சென்று சிரிக்க வேண்டும் என்றெண்ணினால் ஜாலியோ ஜிம்கானா நல்லதொரு எண்டர்டெயின்மெண்ட் படம் தான்.